தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் விடுதலை  சிறுத்தை கட்சியின் சார்பாக வண்டி வாகனம், மகளிர் சுய உதவி குழுக்கள், சிறு சிறு விவசாயிகள் வியாபாரிகள், அவர்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் மூன்று மாதம் காலம் வரை பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். உலகை அச்சுறுத்தி வரும் கொரானோ நோய் தாக்குதலில் இருந்து தேனி மாவட்ட மக்களை பாதுகாக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், போன்றவைகளை மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டத. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இல்லாமல் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர் மேலும் நமது மாவட்டத்தின் பெரும்பான்மையான பொதுமக்கள் வண்டி வாகனம் கடன்களுக்காக பல்வேறு நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதத் தவணை செலுத்தி வருகிறார்கள். பெரும்பாலான பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களிடம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக கடன் பெற்றுள்ளனர். சிறு சிறு வியாபாரிகள் தினம்தோறும் கட்ட கூடிய வகையில் தினசரி பைனான்ஸ் மூலம் கடன் பெற்று கடனை செலுத்தி வருகிறார்கள் இந்நிலையில் நோய் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு வேலையின்றி உள்ளனர் ஆனால் வண்டி வாகனம, மகளிர் சுய உதவிக்குழுக்கள், மற்றும் சிறு குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆகியவர்கள் கடன் கொடுத்துள்ள பைனான்ஸ் நிறுவனங்கள் மக்களை கட்டாயப்படுத்தி படத்தின் வசூல் செய்கிறார்கள் .கடன் கட்ட இயலாத மக்களுக்கு வசூல் செய்பவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் சூழ்நிலை உருவாகி உள்ளது முதலிய பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பா நாகரத்தினம தேனி  மாவட்ட ஆட்சியர்ரிடம் மனு அளித்தார்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image