ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
" alt="" aria-hidden="true" />
.ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை அடுத்த வி சி மேட்டூர் மற்றும் மாந்தாங்கல் பகுதியில் இயங்கிவரும் சாலிம் ஷூஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் காலனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியருக்கு 3 மாத ஊதியம் வழங்கததால் இருபகுதிகளிளும் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் 200 பெண் ஊழியர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடக் கூடாது என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்திய நிலையில் சம்பளம் வழங்காததால் தொழிற்சாலை வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம் செய்துவருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.